:
Breaking News

சருகை சந்தனமாக்குவார், சரிவை சாதனை சரித்திரமாக்குவார் டாக்டர்.சக்திவேல் அண்ணா.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர், திரு.அருள்செல்வம் கவிதை நடையில் நிகழ்த்திய உரையில் தெரிவித்ததாவது,

இந்த இனிய விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும், பத்மஸ்ரீ.டாக்டர்.சக்திவேல் அண்ணா அவர்கள், எங்களது கேன்சர் கேர் மருத்துவமனை உருவாக்கத்திற்காக அதிக நிதியாதாரங்களை உருவாக்கித் தந்தவர் என்ற வகையில், அவருக்கு கவிதை மூலம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பெயரிலேயே சக்தி கொண்டு, பெரும் பொறுப்புக்கள் பல கண்டு, நீதிவழி நின்று, நித்தமும் உழைத்திடும் வித்தக மனிதர். ஈதலும் இசை பட வாழ்ந்தாலும் என்ற வள்ளுவனின் வாக்குக்கு வலு சேர்க்கும் வள்ளல். சாதித்துக் காட்ட சரித்திரம் படைக்க கடவுளால் அனுப்பப்பட்ட கற்பகவிருட்சம். புற்றுநோய் என்னும் கொடிய நோயை முற்றிலும் விரட்டி அடிக்க மருத்துவமனையை இம்மண்ணில் அமைக்க அன்புத் தம்பிக்கு துணை என நிற்கும் தூய மனிதரே. உங்கள் விரல் பட்டால் விறகு கூட வீணையாகிவிடும். உங்கள் குரல் கேட்டால் சருகு கூட சந்தனம் ஆகிவிடும். உங்களை பெருமைப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் .பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அதேபோல சேவை செம்மல் டாக்டர் முருகநாதன் அவர்களுக்கும் ஒரு கவிதை கொண்டு வந்துள்ளேன். அதை இந்த விழாவில் படிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மண்ணையும், மக்களையும் நேசிக்கும் மகத்தான மனிதர். கல்லும் உடையாமல், சிலையும் உடையாமல் மக்களை செதுக்கும் மனிதநேய சிற்பி. ஊருக்கு வெளிச்சம் தர உருகும் மெழுகுவர்த்தி. மக்கள் மனங்களில் என்றும் அவர் சக்கரவர்த்தி. இலவச புற்றுநோய் மருத்துவமனை உருவாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் கருணை மிகு மருத்துவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர். எல்லோருக்கும் உதவி செய்வதில் அவர் நல்லவர். தங்களை பெருமைப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். மனிதனின் நோய் தீர வேண்டும் என்றால், டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்தால் மட்டுமே ஆரோக்கியம் அடைய முடியும். ஆனால், எங்கள் மருத்துவர் டாக்டர்.முருகநாதன் அவர்களை பார்த்தாலே நோய் தீரும் என்பதை 

நான் அனுபவபூர்வமாக உணர்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எனது சர்க்கரை நோய் மிகவும் அதிகமாக இருந்தது. அவரது ஆலோசனையின் படி உணவு முறைகளிலும், மருத்துவ கண்காணிப்பிலும், திருத்தங்களை செய்து கொண்ட பிறகு, சர்க்கரை நோய் என்னை விட்டு அகன்று விட்டது. சர்க்கரை நோய் முற்றிலும் அகன்று விட்டதால் வயது குறைந்ததாகவே கருதுகிறேன். அவருக்கு எனது நன்றிகள்.  முருகன் என்றால் அழகு. பழனி மலை முருகனுக்கு அழகும் பெருமையும் சேர்த்ததில் நமது ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் அவர்களுக்கு அறங்காவலர் தலைவராக மிகச்சிறந்த பங்களிப்புள்ளது. அவர் அறங்காவலர் தலைவராய் இருக்கிறபடியால் இன்னும் 

இரண்டு மூன்று ஆண்டுகளில் திருப்பதியை மிஞ்சக் கூடிய அளவில் புதுப்பொலிவு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கும் நான் ஒரு கவிதை இயற்றி வந்துள்ளேன். தலைக்கனம் இல்லாத தலைமையின் இலக்கணம். முகத்தில் வாடாத புன்னகை. அகத்தில் வற்றாத உற்சாகம். நிறைகுடமாய் நிமிர்ந்து நிற்பவர். குறைவில்லாத குணசீலர். ஏற்றுமதியாளர்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் போற்றுதலுக்குரிய திருப்பூரின் பொக்கிஷமே. முருகனின் மூன்றாம் படை வீடான பழனி மலையில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் அமைத்துத் தந்து பரவசப்படுத்திய பாசமிகு அண்ணனே. விதையை விரிச்சமாக்கும் வித்தைகள் தெரிந்தவர். முயற்சி என்னும் கடலில் நீராடி, வெற்றி முத்து எடுத்த நீங்கள் ஒரு போராளி. புகழின் உச்சியில் இருந்தாலும் அமைதியின் சொரூபமான அற்புதமே. அகம் மகிழ்ந்து உளம் நிறைந்து உங்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். உலகைக் காக்க மும்மூர்த்திகள் இருப்பது போல திருப்பூர் நகரத்தையும், தொழிலையும் காக்க இந்த மும்மூர்த்திகளும் பாடுபட்டு வருவதால் இவர்களுக்கு சிறப்பு செய்ய ரோட்டரி நண்பர்களையும், தொழில்துறையினரையும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களையும் அன்போடு அழைக்கிறேன். அவருக்கும் இந்த விழாவில் எங்கள் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையோடு அவருக்கும் பொன்னாடை அணிவித்து பெருமை சேர்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல். டாக்டர் முருகநாதன். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் திரு கே எம் சுப்பிரமணியன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media