KYRA PHOTON TECH PVT.LTD
- Repoter 11
- 20 Nov, 2024
தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.
இதன் நிர்வாக இயக்குனர் திரு வெங்கட் பாலாஜி அவர்களை நமது இதழ்க்காகவும், நமது YOUTUBEசேனலுக்காகவும் சந்தித்து பேட்டி கண்டோம். அவர் நம்மிடம் தெரிவித்ததாவது,
கேள்வி: உங்களது, கைரா ரோபோ போடோன் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவன தொடக்கம், உங்களது தொழில் அனுபவம், இந் நிறுவனத்தின் சேவைகள், மற்றும் வளர்ச்சி பற்றி கூறுங்கள்?
நான், சென்னை கிண்டியில் உள்ள காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில்,
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும்
எம்.டெக் ஹை வோல்டேஜ் இன்ஜினியரிங் படித்து முடித்து கோல்ட் மெடலிஸ்ட்டாக தேர்ச்சி பெற்றேன். படித்து முடித்தவுடன் சீமென்ஸ் நிறுவனத்தில், ஜெர்மனியில்
6 ஆண்டுகள் பணிபுரிந்தேன். இங்கு பணி புரியும் போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவை எல்லாவற்றிலும் சிறப்பாக பணிபுரிந்தேன். அங்கு பணிபுரிந்த அனுபவத்தோடு
இந்தியா வந்து, இங்கும் 7 ஆண்டுகள் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து உள்ளேன். நான் இந்திய நிறுவனத்தில், பணி பொறுப்பு ஏற்றபோது ஆண்டு வர்த்தகம் 5 கோடியாக இருந்தது. அந்த நிறுவனத்தில், நிர்வாக இயக்குனராக 6 ஆண்டுகள் பணிபுரிந்து வெளியே வரும் பொழுது, அந்த நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 600 கோடி என்ற அளவில், பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்ற கம்பெனியாக தற்போது அந்த நிறுவனம் இயங்கி வருகிறது. நான் பொறுப்பு
வகித்த இந்த இந்திய நிறுவனத்தில்,
நான் வேலைக்கு பொறுப்பு ஏற்கும் பொழுது 10 பேர் மட்டுமே பணிபுரிந்தனர். இன்று
அந்த நிறுவனத்தில் 600க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். புராடக்ட் நிறுவனமாக இருந்த அந்த நிறுவனத்தை, புராஜெக்ட் நிறுவனமாக எனது
அனுபவத்தின் மூலமாக மாற்றி அமைத்தேன். சிறிய நிறுவனமாக இருந்த அந்த
நிறுவனத்தை, மிகப்பெரிய இன்ஜினியரிங் நிறுவனமாக மாற்றி வழங்கிவிட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், கைரா போடோன் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். இந்த நிறுவனத்தை நானும், எனது துணைவியாரும் இணைந்து தொடங்கினோம். கைரா
என்பது சூரியனைக் குறிப்பதாகவும், போடோன் என்பது அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலை குறிப்பதாகவும், டெக் என்பது எங்களது கம்பெனியின் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும்,
இந் நிறுவனத்திற்கு கைரா போடோன்
டெக் பிரைவேட் லிமிடெட் என பெயர் வைத்து நடத்த தொடங்கினோம்.
அதன் பிறகு, தமிழ்நாடு மின்சார வாரியத்திடமும், டேட்டா என்ற அமைப்பிடமும் கலந்து ஆலோசனை செய்தோம். நாங்கள் நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில், சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்துவது மிகவும் அதிக பொருள் செலவு கொண்டதாக இருந்தது. அதாவது 80 ஆயிரம் முதல், 1 லட்சத்து
20 ஆயிரம் வரை இதற்காக செலவழிக்க வேண்டியது இருந்தது. எனவே, மேற்கூரை சூரிய சக்தி மின்சார உற்பத்தி அமைப்பை, குறைந்த செலவில் அனைவரும் நிறுவிக்கொள்ளும் வகையில், திட்டங்களை உருவாக்கி முதல் ஆண்டிலேயே 20,000க்கும் அதிகமான மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தி வழங்கினோம். அடுத்த கட்டமாக, தொழிற்சாலைகளுக்கான சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்த செயல் திட்டங்களை வடிவமைத்து, தொழில் துறையினருக்காக வழங்க தொடங்கினோம். ஒரு உற்பத்தி தொழிற்சாலையில், மின் கட்டணம் அதிகரிக்குமானால், அவர்கள் தயாரித்து வழங்கும் தயாரிப்புகளில் மின்சார செலவு கணக்கீடு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, சூரிய சக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது, அவர்களின் தயாரிப்பு பொருட்களின் விலையையும் குறைவாகவே நிர்ணயித்து தொழிலில் வளரலாம் என்பதை தொழில்துறையினருக்கு எடுத்துரைத்தோம். அதற்கு நாங்கள் முதலில் தேர்வு செய்தது, இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நகரமான திருப்பூர். கடந்த
2018ம் ஆண்டு முதல் எங்களது கைரா போடோன் டெக் நிறுவனம், ஏராளமான சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை திருப்பூர் தொழிற்துறையினருக்கு
அமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
கேள்வி: சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கினாலும், திருப்பூரில் நீங்கள் ஏராளமான நிறுவனங்களுக்கு சோலார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்கள். உங்களது நிறுவனத்திற்கு திருப்பூர் தொழில்துறையினர் எந்த அளவுக்கு வாய்ப்புகளை வழங்கினார்கள்?
சென்னையைப் பொறுத்தவரை, சூரிய சக்தி மின் உற்பத்தி பற்றி மேலோட்டமாக அறிந்துள்ள மக்களும், தொழில்துறையினரும் உள்ளனர். ஆனால், திருப்பூர் அப்படியல்ல, திருப்பூர் தொழில்துறையினர் ஏற்கனவே சோலார் அமைப்புகளை ஏராளமாக நிறுவியுள்ளனர். ஆனால், அவை ஏராளமான பிரச்சனைகளோடு இயங்கிக் கொண்டிருந்தது. காரணம், சூரிய சக்தி மின் அமைப்பு தொழிற்சாலைகளிலோ, நிறுவனங்களிலோ, வீடுகளிலோ நிறுவப்படும் பொழுது அந்த அமைப்பு குறித்த தெளிவான விளக்கம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சர்வீஸ் பணிகளில் எப்போது அழைத்தாலும் உடனே வந்து அந்த வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவையெல்லாம் திருப்பூரில் சரியாக இல்லை அவர்களுக்கு சூரிய சக்தி அமைப்பை ஏற்படுத்தி வழங்கிய நிறுவனங்கள், சர்வீஸ் பணிகளை சரியாக செய்து தரவில்லை என்பதை அறிந்து கொண்டு, அவற்றை
நாங்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டோம். மின்வாரியத்தின் ஒத்துழைப்பு, சர்வீஸ் பணிகளில் எங்களின் சிறப்பான செயல்பாடு, அக்கறையான அணுகுமுறை, ஆகியவற்றால் பல புதிய வாடிக்கையாளர்களை, திருப்பூரில் நாங்கள் பெற்றோம். 600க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சோலார் மின் உற்பத்தியை அமைப்புகளை நாங்கள் ஏற்படுத்தி தந்துள்ளோம். இதுவரை, நாங்கள் திருப்பூரில் 20 மெகாவாட் அளவில் மேற்கூரை மின் உற்பத்தி அமைப்புகளை திருப்பூர் தொழிற்துறையினருக்கு வடிவமைத்து தந்துள்ளோம். நாங்கள், அமைத்துத் தரும் சோலார் அமைப்பிற்கு, முதல் 5 ஆண்டுகள் இலவச சர்வீஸ் என்ற உத்தரவாதத்தை வழங்கி, நாங்கள் சோலார் அமைப்புகளை அவர்களின் தேவைக்கு தக்க படி நிறுவித் தருகிறோம். இதன் மூலமாக மதுரை, ராஜபாளையம், கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலும் ஏராளமான
சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளோம். அங்குள்ள வாடிக்கையாளர்கள், நீங்கள் திருப்பூரிலேயே இவ்வளவு அதிகமான அளவில் சோலார் அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது, சிறப்பானது என பாராட்டியுள்ளனர்.
இதன் மூலம், பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றது எங்களது நிறுவன வளர்ச்சிக்கும் உதவிகரமாக அமைந்தது.
கேள்வி: ஒரு தொழிற்சாலையில் புதிதாக சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்குரிய வழிமுறைகள் என்ன?
புதிதாக, தொழிற்சாலை தொடங்கப்படும் பொழுது, மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு அந்த தொழிற்சாலைக்கு
தேவையான மின் அளவுகளை பதிவு செய்யும் பொழுது, சோலார் அமைப்புக்கும்
அனுமதி வாங்கும் சாத்தியக்கூறுகள்
தற்போது உள்ளது. தொழிற்சாலை கட்டி முடித்த பிறகும் கூட சோலார் அமைப்புகள் அளவுகளுக்கு தக்கபடி, அந்த தொழிற்சாலையின் தேவைக்கு தக்கப்படி சோலார் அமைப்புகளை அனுமதி
பெற்று அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, திருப்பூரில் ஒரு நிறுவனத்திற்கு நாங்கள் சோலார் அமைப்பை ஏற்படுத்தி தந்தோம். அந்த நிறுவனத்தில் காலை
8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை வேலை நேரமாக இருந்தது. ஆனால்,
சோலார் அமைப்பின் மூலம் மின்சாரம் உற்பத்தியாவது காலை 6 மணி முதல்
மாலை 6 மணி வரை, மிகச் சிறப்பாக உற்பத்தியாகும். இதை அந்த நிறுவன உரிமையாளருக்கு தெரியப்படுத்தி உங்களது வேலை நேரத்தை காலை 6 முதல் மாலை
6 மணி வரை மாற்றி அமைத்துக் கொண்டால் முழுவதுமாக சோலார் மின்சாரத்தில் உங்களது நிறுவனம் இயங்கும்படி
செய்து கொள்ளலாம் என எடுத்துக் கூறியவுடன் உடனடியாக அவர் அந்தப்படி வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், அவருக்கு உற்பத்திச் செலவில் மிகவும் மிச்சம் ஏற்படுகிறது. திருப்பூர் தொழில்துறையினர் போல புரிதல் உள்ள தொழில்துறையினரை வேறு ஊர்களில் பார்க்க இயலாது.
கேள்வி: பொருளாதாரம் மற்றும் இடவசதி உள்ள தனிநபர்கள் மற்றும் தொழிற்துறையினர், சோலார்
மின் உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்தி அதை வர்த்தகமாக மாற்றி லாபமடைய வழிமுறைகள் உள்ளதா? இருந்தால் அதைப் பற்றி தெளிவாக சொல்லுங்கள்?
பொதுவாக, சூரியசக்தி மின்சாரத்தை மேற்கூரை மின்சார உற்பத்தி அமைப்பாக ஏற்படுத்தி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது ஒரு முறை
என்றால், இதே சோலார் மின் உற்பத்தி மூலமாக முதலீடு செய்து, வங்கி
வழங்கும் வட்டி விகிதாச்சாரத்தை விட அதிகமாக லாபம் அடையலாம். உதாரணமாக, பொருளாதார வசதி உள்ள ஒரு தனிப்பட்ட நபர், 3 ஏக்கர்
இடத்தில் ஒரு மெகா வாட் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்தி,
அதிக லாபம் அடையலாம். இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த விரும்புகிறவர்கள் இடம் இல்லை என்றாலும் நாங்கள்
அந்த இடத்தை அவருக்கு வழங்கி 1 மெகா வாட் முதல், 2 மெகாவாட், 5 மெகா வாட்,
20 மெகாவாட், 30 மெகாவாட் வரை சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை ஏற்படுத்தித் தந்து 25 ஆண்டுகள் வரை அவற்றை பராமரிக்கும் பொறுப்பையும் நாங்களே நிறைவேற்றித் தருகிறோம்.
ஒரு மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை ஏற்படுத்த, சுமார் 5.50 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டி வரும்.
இந்த முதலீடு அந்த அமைப்புக்கான
இட அளவீடுகளையும் சேர்த்து
சொல்கிறேன். இந்த முதலீட்டில்
30 சதவிகிதம், அவர்களது
சொந்த முதலீடாக அதாவது 1.50 கோடி வரை இருக்க வேண்டும். மீதமுள்ள,
4 கோடி முதலீட்டை எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புக்கென்று ஏராளமான வங்கிகள் சிறப்பு திட்டத்தின் மூலம் கடன் வழங்குகின்றன.
இவற்றை தொழில்துறையினர் மற்றும் பொருளாதார வசதி உள்ள தனி நபர்கள் நிறுவும் பொழுது ஆண்டுக்கு 20 லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தியாகும். இந்த மின்சாரத்தை யூனிட் ரூபாய் 5க்கு
விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானமாகப் பெற இயலும்.
இந்த முதலீட்டை 4அல்லது 5 வருடங்களில் திரும்பப் பெற்று விட முடியும். இப்பொழுது நான் கூறிய இந்தத் திட்டத்தின் துவக்கம் முதல் இந்த திட்டத்தின் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை வர்த்தகம் செய்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு லாபமாக
மாற்றி அமைத்து தரும் வரை எல்லாவற்றிலும் உடனிருந்து அவர்களுக்கு நிறைவேற்றி தருவதுதான் எங்களது பணியாக நாங்கள் எங்களது
கைரா போடோன் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக
செய்து வருகிறோம். இதை தொழில்துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்
தனது பேட்டியில் குறிப்பிட்டார். இவரை தொடர்பு கொள்ள :
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

