குறைந்த தொழிலாளர்கள் மூலம் அதிக உற்பத்தி எடுக்க HI-TECH SEWING SYSTEMS வழங்கும் ஆட்டோமேஷன் எந்திரங்கள்.
- Repoter 11
- 02 Apr, 2026
திருப்பூரில் நடைபெற்ற நிட்டெக் தொழில்நுட்ப கண்காட்சி, உலகளவில் வேகமாக முன்னேறி வரும், ஆட்டோமேஷன் (AUTOMATION) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக திகழ்ந்தது. அதிக உற்பத்தித் திறனை அடைவது, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பது மற்றும் தொழில்துறை செயல்திறனை உயர்த்துவது போன்ற தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், ஹைடெக் சூயிங் ஆட்டோமேஷன் நிறுவனம், தனது பல்வேறு அதிநவீன தையல் மற்றும் உற்பத்தி இயந்திரங்களை, இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தி தொழில்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், திரு.கேசவமூர்த்தி அவர்களிடம் இது குறித்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, தற்போதைய கார்மெண்ட் உற்பத்தித் துறையில், ஆட்டோமேஷன் எவ்வாறு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக, டி-ஷர்ட் மற்றும் பிற கார்மெண்ட் தயாரிப்புகளில் பெரும்பாலும் சவாலாகக் கருதப்படும் பிளாக்கெட் மேக்கிங் செயல்முறைக்குத் தீர்வாக, பல்வேறு தானியங்கி இயந்திரங்களை பல முக்கிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ஆட்டோமேட்டிக் பாக்கெட் அட்டாச்சிங் மெஷின் போன்றவை முக்கியமானவை. இந்த இயந்திரங்கள் மூலம், பாரம்பரிய
முறையில் ஏழு பேர் வரை செய்ய வேண்டிய பணியை, ஒரே நபர் மூலம் மிக எளிதாகவும், வேகமாகவும் மேற்கொள்ள முடிகிறது.
இதன் மூலம் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாளில் சுமார் 800 துண்டுகள் உற்பத்தி செய்யக்கூடிய பணியை, பாரம்பரிய முறையில் 7 முதல் 8 தொழிலாளர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த தானியங்கி இயந்திரங்களின் உதவியால், ஒரே நபர் மூலம் அதே அளவிலான அல்லது அதற்கும் அதிகமான உற்பத்தியை எளிதாகப் பெற முடிகிறது. இதனால், உற்பத்தி திறன்
5 மடங்கு வரை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், பாட்டம் ஹெம்மிங், லேபில் அட்டாச்சிங், பட்டன் ஃபீடிங், எலாஸ்டிக் ஜாயினிங், துணி ரோல் வெட்டுதல், கேமரா அடிப்படையிலான ஃபேப்ரிக் இன்ஸ்பெக்ஷன் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கான தானியங்கி இயந்திரங்களையும் எங்களது ஹைடெக் சூயிங் மெஷின்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதன் மூலம், உற்பத்தி தரம் மற்றும் வேகம் ஆகிய இரண்டும் மேம்படுகின்றன.
இந்தக் கண்காட்சியில் புதிய தொழில் முனைவோரும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களும், பெருமளவில் பங்கேற்று, இந்த நவீன இயந்திரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். தொழில்துறையில் முன்னேற்றம் அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த வகையான ஆட்டோமேஷன் தீர்வுகள்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயந்திர விற்பனைத் துறையில் செயல்பட்டு வரும் ஹைடெக் சூயிங் ஆட்டோமேஷன் நிறுவனம், தொழில் துறையினரின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. தொழில்முனைவோர் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தொழிலாளர் சார்பினைக் குறைக்கவும், இந்நிறுவனம்
வழங்கும் ஆட்டோமேஷன் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்புக்கு :
HI-TECH SEWING SYSTEMS, Sripathi Nagar,
15 Velampalayam, Tirupur-641 652. Cell: 90039 54065.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

