:
Breaking News

நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில் ஆர்.ஜி டிரேடர்ஸ் மற்றும் ராஜ் டிரஸ்சஸ் நிறுவனத்திற்கு சிறந்த தொழில்துறை சேவைக்கான டாக்டர். அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

ஆர்.ஜி டிரேடர்ஸ் மற்றும் ராஜ் டிரஸ்சஸ் நிறுவனத்தார் கடந்த பல ஆண்டுகளாக, தொழில்துறையினர் வளர்ச்சிக்காக ஏராளமான பல புதிய ரக துணிகளை அறிமுகம் செய்து, உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் உயர்தரத்தோடு விற்பனை செய்து வருகின்றனர். உலகளவில் புதிதாக அறிமுகம் செய்யப்படும், துணிகளையும் அடையாளம் கண்டு அவற்றை தொழில்துறையினருக்கு வழங்கி வருகின்றனர். Taiwan Lycra, Plain Polyester, Dot Knit Micro, Addidas Selena, Spun Lacoste, Reebook Fabric, Spun Jersey, Poly Cotton Jersey, Poly Cotton Fleece, Poly Viscose Micro Jersey With Lycra  போன்ற புதிய ரக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருகின்றன. இதன் இயக்குனர்கள், திரு.காசிராஜன் மற்றும் திரு.ராகுல் அவர்கள் தொழில்துறையினர் விரும்பும் வகையில், பல துணி ரகங்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வளர்கிறார்கள். இவர்களின் தொழில் சேவையை பாராட்டி நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளிவிழாவில் டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பத்ம ஸ்ரீ.டாக்டர்.சக்திவேல், சேவைச் செம்மல் டாக்டர்.திரு.முருகநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன், நிட்மா தலைவர். அகில் ரத்தினசாமி, துணை மேயர் திரு.எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் டையர்ஸ் அசோஷியேசன் தலைவர் திரு.காந்திராஜன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய திரு.காசிராஜன் அவர்களது புதல்வி செல்வி.சாய்னாராஜ் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media