:
Breaking News

தரமான துணிகளின் தனித்துவமே, மகாஸ் டிரேடர்ஸ் வெற்றியின் அடையாளம்.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg


திருப்பூர், பின்னலாடைத் தொழில்துறையின் துணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக துணி வர்த்தகப் பயணத்தை தொடர்ந்து வரும் நிறுவனம்தான், மகாஸ் டிரேடர்ஸ் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தரம், நம்பிக்கை ஆகியவற்றால் சிறந்து விளங்கும், இந் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் 

திரு.ஜெயவிஷ்ணு அவர்களை சந்தித்து பேசினோம். அவர், மகாஸ் டிரேடர்ஸ் நிறுவனத்தைப் பற்றி நம்மிடம் தெரிவித்ததாவது,  எங்களது மகாஸ் டிரேடர்ஸ் நிறுவனம், கடந்த 16 ஆண்டுகளாக பின்னலாடைத் துணி வர்த்தகத் துறையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. எங்களது, தொடக்க காலத்தில் ரெடி டு கட் காட்டன் துணி ரகங்களை விற்பனை செய்து வந்தோம். இந்த நிறுவனத்தை, எனது மாமா திரு.செந்தில்குமார் அவர்கள் தொடங்கி, ஏராளமான தொழில்துறை வாடிக்கையாளர்களை பெற்று, மிகப்பெரிய அளவில் இதன் வர்த்தகத்தை விரிவு படுத்தியுள்ளார். தொழில் வளர, வளர அதிக இடம் தேவைப்பட்டதால் தற்போது, திருப்பூரில் இயங்கி வந்த நடராஜா தியேட்டர் முழுவதையும் துணி வர்த்தக மையமாக வடிவமைத்து, தொழில்துறை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து ரக பின்னலாடை துணிகளையும், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இருப்பு வைத்து, வர்த்தகம் செய்து வருகிறோம். எங்களது நிறுவனத்தில், அதிகமாக காட்டன் ரக பின்னலாடை துணிகளை இருப்பு வைத்துள்ளோம். மறுசுழற்சி செய்யப்பட்ட காட்டன் துணிகளையும், தரம் குறையாமல் பினிஷிங் செய்து, எந்தவித குறையும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் விரும்பும் தரத்தில் தயாரித்து வழங்கி வருகிறோம். இந்த துணிகள், 30 முதல் 35 கலர்களில் எங்களிடம் கிடைக்கின்றன. எங்களிடம் இல்லாத கலர்களை, வாடிக்கையாளர்கள் சாம்பிள்கள் கொண்டு வந்தாலும், அவர்கள் விரும்பும் கலர்களில் துணிகளை புதிதாக தயார் செய்து விரைவாக வழங்குவது எங்கள் நிறுவனத்தின் தனிச்சிறப்பு. சிங்கிள் ஜெர்சி, லூப் நிட், பிரஞ்ச் டெய்ரி,  ரைசிங் பிரீஸ், துணிகள் மற்றும் பல்வேறு வகையான துணி ரகங்கள் எங்களிடம் உள்ளது. இவை அனைத்திற்கும் பொருத்தமான மேட்சிங் காலர், கப் லைக்கிரா ரிப் போன்ற துணி ரகங்களும் எங்களிடம் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள், துணி ரகங்களை தேர்வு செய்த உடன் ரெடி டு கட் முறையில் உடனடியாக வடிவமைக்கும் வகையில், தயார் நிலையில் ஏராளமான துணிகள் எங்களிடம் உள்ளன. சீசனுக்கு மட்டும் கிடைக்கும், துணி ரகங்கள் மட்டுமல்லாது. சீசன் இல்லாத துணிகள் கூட எங்களிடம், மொத்தமாக கிடைக்கும். குளிர்காலத்திற்கான, பின்னலாடை துணிகள் கோடை காலத்திலும், கோடை காலத்திற்கான துணிகள் குளிர் காலத்திலும், எங்களிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் எந்த ரக துணி வேண்டுமென்றாலும் எப்போதும் எங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். 

எங்களது, தொடர் வளர்ச்சிக்கு காரணம், உற்பத்திக் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும், நிட்டிங் மற்றும் தர பரிசோதனை பிரிவுகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எனவே, துணி தயார் செய்யப்பட்டதும், தர பரிசோதனை முறையை மிகவும் வலுப்படுத்தினோம். ஒரு துணி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை எப்படி இருந்தாலும், அவற்றை தரமுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும், என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். இன்று வரை, அந்தத் துணி ஆய்வுத் தர நிலையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் . இதுவே, எங்களது நற்பெயருக்கு முக்கிய காரணம் இந்த தர பரிசோதனை முறையாகும். மேலும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி வர்த்தகம், தற்போது பாலியஸ்டர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் வளர்ச்சியை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு காரணம், அது ஒரே ஒரு துறைக்கான துணி மட்டும் அல்ல என்பது தான் கார்பரேட் டி-ஷர்ட்டுகள், பள்ளிச் சீருடைகள், ட்ராக் பேண்டுகள், சார்ட்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு பாலியஸ்டர் துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தொழில்துறையின் பாலிஸ்டர் துணித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 25 முதல் 30 வகையான பாலியஸ்டர் துணி ரகங்களும் 35 முதல் 50 நிறங்களில் தரமான பாலிஸ்டர் துணி 

ரகங்களும் எங்களிடம் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ற மாதிரிகள் மற்றும் வடிவமைப்புகளை வழங்குவதற்கான தனி ஸ்டுடியோ அமைக்கும் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எங்களது, வாடிக்கையாளர்களை எங்களது தொழில் கூட்டாளியாகவே நாங்கள் கருதுவதால், தொழிலில் வளர அவர்கள் ஒரு யுத்தியோடு வந்து எங்களிடம் ஆலோசனை செய்யும் பொழுது, எங்களுக்குத் தெரிந்த அனுபவங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தொழிலில் வளர உதவி செய்து வருகிறோம். இது தான் எங்களுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி. எங்களது அனுபவத்தையும், அவர்களுக்கு கொடுப்பதால் அவர்கள் தொழிலில் வளர்வதற்கு பக்கபலமாக நாங்கள் இருந்து வருவதும் எங்களது வளர்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்புக்கு. MAHAS TRADERS, 16/5, Nataraj Theatre, (Near Khadharpet), Tirupur - 4. Mr.C.Jagadheswaramoorthi : 87607 04490.

Mr.B.Omprakash : 63797 59696, Mr.T.Jayavishnu  : 97519 63027

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media