:
Breaking News

குறைந்த முதலீடு, அதிக உற்பத்தி, பிரிண்டிங் தொழில்முனைவோர் வளர்ச்சி இதுவே எங்கள் நோக்கம்

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

பின்னலாடைகளின் மதிப்பை கூட்டி வர்த்தகம் செய்வதில் அதிக அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றது பின்னலாடை பிரிண்டிங் தொழில்துறை. உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதி வர்த்தகத்திலும், பிரிண்டிங் எந்திரங்கள் மற்றும் பிரிண்டிங் தொழில் துறையின் அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் முக்கிய காரணமாக அமைகின்றன. அதிநவீன பிரிண்டிங் எந்திரங்களை, மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தி வரும் நிலை மாறி, நமது உள்நாட்டிலேயே அதுவும், கோவையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள், இறக்குமதி எந்திரங்களுக்கு இணையான தொழில் நுட்பத்துடன் எந்திரங்களை தயார் செய்து தொழிற்துறையினருக்கு வழங்கி வருவது இத்தொழிலின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட FAHI-Q INNOVATIONS நிறுவனத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான அதிநவீன பிரிண்டிங் எந்திரங்கள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக,
இத் தொழில்துறை வளர்ச்சியில் ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் இறக்குமதி எந்திரங்களை நிறுவுவதற்கு அதிக அளவிலான முதலீடுகள் தேவை என்ற நிலை மாறி, மிகவும் குறைந்த விலையிலேயே எந்திரங்களை நிறுவி தொழிலில் வளர FAHI-Q INNOVATIONS நிறுவனம் இத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. அத்துடன் தரம், நீடித்த உழைப்பு, எந்திரத்தின் உறுதித் தன்மை, உத்தரவாதமான சர்வீஸ் சேவைகள் இவற்றால் இந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராதரவோடு வளர்ந்து வருகிறது. இந் நிறுவனத்தின் தொழில்துறை சேவைகளை பாராட்டி கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த நமது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் டாக்டர் அப்துல் கலாம் சிறந்த சேவைக்கான விருதுகள் 

வழங்கும் விழாவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.சக்திவேல் அவர்களால் சிறந்த ஓவல் பிளஸ் டிஜிட்டல் அதிநவீன தொழில்நுட்ப எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் புதிய சரித்திரம் படைத்தமைக்காக விருது வழங்கிய இந்நிறுவனத்தார் கௌரவிக்கப்பட்டனர். இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப எந்திரங்களை குறித்தும், எதிர்கால திட்டங்கள், அடுத்த கட்டத் தயாரிப்பு வழிமுறைகள் குறித்தும் இதன் தலைமை விற்பனை மேலாளர் திரு. முகமது அன்சார் அவர்களை சந்தித்து பேட்டி கண்டோம் இனி அவரது பேட்டியை இந்த  பகுதியில்  படித்து  மகிழலாம்.


கேள்வி: பேகி கியூ இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் தொடக்கம், அதனுடைய இலக்குகள், தொழில்துறை வளர்ச்சி பயணங்கள் குறித்து கூறுங்கள்?

FAHI-Q INNOVATIONS நிறுவனம், 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, 2016 முதல் 2020 வரை நாங்கள் நான்கு ஆண்டுகள் பிரிண்டிங் மூநுய JOB WORK UNIT ஒன்றை நடத்தி, எந்திரங்களின் உண்மையான செயல்திறனை நேரடியாக முழுமையாக அறிந்து கொண்டோம். அந்த, அனுபவமே எங்களை எந்திர உற்பத்திக்குள் கொண்டு வந்தது, எந்திரத்தை தயாரித்து உடனே வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கிவிடவில்லை. முதலில், அதையே நாங்கள் பயன்படுத்தி, அவுட்புட், செயல்திறன், சிக்கல்கள் அனைத்தையும் ஆய்வு செய்தோம். அதன் பிறகே, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகினோம். மேலும், நாங்கள் விற்பனை செய்த முதல் எந்திரத்திலிருந்து, இன்று வரை வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வைத்து அடுத்த எந்திரங்களில் தொடர்ச்சியான மேம்பாடுகளை செய்கிறோம். இந்தியா முழுவதும், இன்று வரை 450க்கும் மேற்பட்ட பிரிண்டிங் எந்திரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இதில் ரவுண்ட் டைப், ஓவல் டைப் மற்றும் ஓவல் வித் டிஜிட்டல் போன்ற பல்வேறு வகை எந்திரங்கள் அடங்கும். இன்று வரை எங்களிடம், எந்திரங்களை வாங்கிய வாடிக்கையாளராக இருந்தாலும், புதிய வாடிக்கையாளராக இருந்தாலும், நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை கேட்டறிந்து, புதிய தொழில் நுட்பத்தை இயந்திரங்களில் உள்ளீடு செய்து அவற்றை நாங்களும் TRIAL & ERROR பார்த்து தான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் R&D குழு தொடர்ந்து, புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவை வெற்றி பெறும் போது அந்த தொழில் நுட்பங்களை எங்களது எந்திரங்களில், நாங்கள் பயன்படுத்துகிறோம். இத்தனை கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, எங்களது எந்திரங்கள் தயாரிக்கப்படுவதால் எங்களது எந்திரங்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.



கேள்வி: நீங்கள் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஓவல் வித் டிஜிட்டல் எந்திரம் பற்றியும் அதன் தொழில்நுட்பம்  பற்றியும்  கூறுங்கள்?

எங்களது ரவுண்டு டிஜிட்டல் எந்திரங்கள் இதுவரை 450க்கும் மேற்பட்ட எந்திரங்களை இந்திய அளவில் நாங்கள் விற்பனை செய்துள்ளோம். மேலும், வெளிநாடுகளுக்கும் இந்த எந்திரத்தை ஏற்றுமதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓவல் எந்திரம் கடந்த வருடம் பங்களாதேஷிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளோம். ஓவல் டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரம் எங்களின் முக்கிய மைல்கல்லாகும். நீங்கள் சொன்னது போல டாக்டர்.அப்துல்கலாம் விருது வழங்கும் விழாவில், டாக்டர். சக்திவேல் ஐயா அவர்கள் இந்த ஓவல் பிரிண்டிங் எந்திரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த எந்திர அறிமுகத்திற்கு முன்பே நாங்கள் இந்த எந்திரத்தின் விற்பனையை செய்ய துவங்கினோம்.15க்கும் மேற்பட்ட எந்திரங்களை திருப்பூர், கர்நாடகா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் நிறுவியுள்ளோம். இந்த ஓவல் பிரிண்டிங் எந்திரத்திற்கான வரவேற்பு மிகவும் அதிகமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த எந்திரம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இந்த எந்திரத் தேவை இருந்த போதிலும் FAHI-Q INNOVATIONS நிறுவனம் இந்த எந்திரத்தை தயார் செய்து வழங்கும்போது நாங்கள் நிறுவிக் கொள்கிறோம் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களும் எங்களுக்கு இருக்கின்றனர். 20 எந்திரங்களுக்கும் மேல் தற்பொழுது உற்பத்தியில் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இந்த எந்திரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இறக்குமதி எந்திரங்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழலில், நாங்கள் 30 நாட்களுக்குள் எந்திரத்தை டெலிவரி செய்து, இன்ஸ்டாலேஷன் செய்து இயங்கு நிலைக்கு கொண்டு வந்து விடுகிறோம். ஓவல் பிரிண்டிங் எந்திரத்தின் முதல் ஏற்றுமதியை பங்களாதேஷுக்கு வெற்றிகரமாக செய்துள்ளோம். தற்போது, வெளிநாட்டு சந்தைகளிலும் எங்கள் எந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் முதுகெலும்பு சர்வீஸ் சேவைகள் ஆகும். திருப்பூரில் மட்டும் 12 சர்வீஸ் இன்ஜினியர்கள் உள்ளனர். 24x7 சேவை வழங்குகிறோம். லூதியானா, கொல்கத்தா, டெல்லி போன்ற தொழில் மையங்களிலும் தனித்தனி சேவை குழுக்கள் செயல்படுகின்றன.


கேள்வி: நீங்கள் தயாரித்து வழங்கும் பிரிண்டிங் எந்திரங்களுக்கான உதிரி பாகங்களை 

எந்தவிதமான உத்தரவாதத்தோடு நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு   வழங்குகிறீர்கள்?

FAHI-Q INNOVATIONS நிறுவனம், எங்களது எந்திரத்தில் பயன்படுத்தக்கூடிய எந்தவிதமான உதிரி பாகங்களாக இருந்தாலும், சர்வதேச தரச் சான்றிதழ்களை பெற்றுள்ள உதிரி பாகங்களையே நாங்கள் பயன்படுத்துகிறோம். விலை குறைப்பிற்காக விலை குறைவான தர சான்றிதழ் இல்லாத உதிரி பாகங்களை நாங்கள் பயன்படுத்துவது இல்லை. சர்வதேச தரச் சான்றிதழ் பெற்ற இந்தியச் சந்தையில் எளிதில் கிடைக்கக்கூடிய உதிரி பாகங்களையே நாங்கள் பயன்படுத்துகிறோம். இரண்டு ஆண்டுகள் முழுமையான சேவை ஆதரவு வழங்குகிறோம். அதன் பின்னரும் சேவையை தொடர்ந்து செய்கிறோம். இரண்டு வருடங்களுக்குப் பின்பு, எங்களது வாடிக்கையாளர்கள் தாங்களாகவே, தங்களது எந்திரங்களை சர்வீஸ் செய்து கொள்ள முயன்றாலும், அந்த உதிரி பாகங்கள் இந்திய சந்தையில் எளிதில் கிடைக்கக் கூடியவையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். ஏனென்றால், நாங்கள் இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களை எங்களது, எந்திர உற்பத்திக்காக 

ஆராய்ந்த போது, வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்சனை வெளிநாட்டு உதிரி பாகங்களை அந்த எந்திரங்களில் பயன்படுத்துவதால் அவர்களுக்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் அந்த உதிரி பாகங்கள் கிடைப்பதற்கு நேர விரையம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டதை 

நாங்கள் வாடிக்கையாளர்கள் மூலமாக அறிந்து கொண்டோம். இவற்றை கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்திய அளவில் சர்வதேச தரச் சான்றிதழ் பெற்ற உதிரி பாகங்களையே எங்களது  எந்திரங்களில்  பயன்படுத்துகிறோம். 


கேள்வி: உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நீங்கள்  கடைபிடித்து   வரும்   வர்த்தக   வழிமுறைகள்   என்ன?

நாங்கள் 10 கலர் எந்திரத்தை ரூபாய் 35 லட்சம் இந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். அதுவே இறக்குமதி செய்யப்பட்ட எந்திரத்தின் விலை இதைவிட இரண்டு மடங்கு அதிகம். ஆரம்பத்திலேயே நாங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 

இத் துறைக்குள்ளாக வந்திருந்தால் அதிகமாக நாங்கள் லாபமீட்டி இருக்கலாம். நாங்கள் என்றுமே லாப நோக்கில் செயல்படுவதில்லை. அதிக லாபத்தை விட, குறைந்த முதலீட்டில் தொழில்துறையினர் வளர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. அதிக எந்திரங்களை விற்பனை செய்து, அதிக உற்பத்தி குறைந்த லாபம் என்கின்ற ரீதியில் நாம் லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இந்த நோக்கத்தில் செயல்பட்டதால்தான் அதிக எந்திரங்களை விற்பனை செய்ய முடிந்தது. இறக்குமதி எந்திரங்களின் பாதி செலவில் தரமான எந்திரங்களை வழங்குவதன் மூலம், இன்று 450க்கும் 

மேற்பட்ட எந்திரங்களையும் விற்பனை செய்து, நூற்றுக்கணக்கான நம்பிக்கையான தொழில் உறவுகளையும் உருவாக்கியுள்ளோம்.


கேள்வி: உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் 

குறித்து   சொல்லுங்கள்?

எங்கள் நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய எந்திரங்களில் நாங்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஏற்கனவே அறிமுகமாகியுள்ள எந்திரங்களிலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழில்நுட்ப அப்டேட்களை செய்து வருகிறோம். வெறுமனே எந்திரங்களை 

மட்டும் தயாரித்துக் கொடுப்பது மாத்திரம் எங்களது வேலையாக இல்லாமல் அதற்கு அந்த எந்திரத்தை இயக்கக்கூடிய டெக்னீசியன்களையும் நாங்கள் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எங்களது எதிர்கால திட்டமாக டிஜிட்டல் எந்திரங்களை இயக்க கூடிய கம்ப்யூட்டர் அறிவு கொண்ட டெக்னிசியன்கள் அவசியம். ஏனென்றால், ஸ்கிரீன் பிரிண்டிங் எந்திரங்களை எளிதாக யார் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். ஆனால் டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்களை அவ்வாறு இயக்க இயலாது. வாடிக்கையாளர்கள் அதற்கான ஒரு ஆட்களை தேடி செல்லாமல் அதற்கான தீர்வாக நாங்கள் இருக்க வேண்டும் என விரும்பினோம். அதனால் எதிர்காலத்தில் ஃபேகிக்யூ டிரெயினிங் அகாடமி தொடங்கி, ஒவ்வொரு எந்திரத்திற்கும் பயிற்சி 

பெற்ற நபர்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்பம், சேவை, மனித வளம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து, 

இந்திய பின்னலாடை பிரிண்டிங் தொழில்துறையை உலக தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் கனவு. தொழில்துறையினரின் வளர்ச்சியே எங்களின் வளர்ச்சி இதுவே FAHI-Q INNOVATIONSன் அடையாளம். இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார் இவரை தொடர்பு கொள்ள :  

FAHI-Q INNOVATIONS, 

Coimbatore Office : S.F No. 632/1, 

632/2, Site No. B-14, Comsia Industrial Estate, Kalipalayam, Vellamadai (P.O), Coimbatore - 641 110.

Tirupur Office : No.2/890A, S.R Nagar South, 

Gandhiji 3rd Street, Andipalayam, 

Tirupur - 641 687. Contact : 98439 87111.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media