பல்வேறு கலர்களில் மதிப்பு கூட்டப்பட்ட பயோ வாஷ் துணிகளை ஒரே இடத்தில் வழங்கிறது BELUI FABRICS நிறுவனம்
- Repoter 11
- 09 Dec, 2025
திருப்பூர் பின்னலாடை டெக்ஸ்டைல் தொழில் வளர்ச்சிக்குத் தக்கபடி, ஏராளமான நிறுவனங்கள் பக்கபலமாக
இருந்து சேவையாற்றி வருகின்றன. அந்த அடிப்படையில், தரமான பின்னலாடை துணி ரகங்களை உற்பத்தி செய்து சேவையாற்றி வரும் நிறுவனம் தான் பெலுயி ஃபேப்ரிக் நிறுவனம்.
பின்னலாடை உற்பத்தித் தொழில்துறையில், 18 ஆண்டுகள் அனுபவம் பெற்று, இந்த நிறுவனத்தை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி, மதிப்பு கூட்டப்பட்ட துணிகளை, அதாவது பயோவாஷ், பயோசிலிக்கான் வாஷ் துணிகளை பிரத்யேகமாக தயார்
செய்து, ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் வழங்கி, சேவையாற்றி வருகிறவர் தான், இதன் நிர்வாக இயக்குனர் திரு.காமராஜர் அவர்கள். அவரை, நமது இதழுக்காக பேட்டி கண்டோம். இனி, அவரது சிறப்பு பேட்டி:
கேள்வி : திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையில், உங்களது தொழில் தொடக்கம், அனுபவம், உங்கள் நிறுவன வளர்ச்சி பற்றிச் சொல்லுங்கள்?
எனது, சொந்த ஊர் திருப்பூர், சிறு வயதிலேயே தந்தை மறைந்துவிட்டார். எனது தாயாரும், ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, படிப்பைத் தொடர முடியாமல், திருப்பூரில் ஒரு துணி வர்த்தக நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலை செய்தபோதே, துணியின் நுணுக்கங்கள், தரம், உற்பத்தி முறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். சுமார், 4-5 ஆண்டுகள் துணி வர்த்தக அனுபவம்
பெற்ற பிறகு, நாமே ஏன் சொந்தமாக தொழில் செய்யக்கூடாது? என்ற எண்ணம் வந்தது. குறிப்பாக, பயோவாஷ் துணிகளின் மென்மைதன்மை எனக்கு மிகவும் பிடித்தது. அதனை, ஏராளமான திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் விரும்பி வாங்குவதால், கடந்த 2017ஆம் ஆண்டு பெலூயி ஃபேப்ரிக்
என்ற பெயரில் சொந்தமாக இந் நிறுவனத்தை தொடங்கினேன். இந் நிறுவனத்தின் மூலமாக, தரமான பின்னலாடைத் துணிகளை, தரமுடன் தயாரித்து, பயோவாஷ் செய்து உயர் தரத்தோடு வழங்குவதால் ஏராளமான புதிய வாடிக்கையாளர்களை பெற்றோம். எங்களது நிறுவனத்தின் மூலமாக கட் டூ பேக் என்ற தரத்தில் துணிகளை வழங்குவதாலும், நாங்கள் வளர்ந்து வருகிறோம்.
கேள்வி: உங்களது பெலூயி ஃபேப்ரிக் நிறுவனம் பயோவாஷ் துணிகளை பிரத்யேகமாக தேர்வு செய்து வர்த்தகம் செய்வதற்கு சிறப்புக் காரணம் உள்ளதா?
பொதுவாக சிலிக்கான் வாஷ் செய்யப்பட்ட துணிகளை, அணிந்தால் ராயல் லுக், கம்போர்ட் மற்றும் வியர்வை உறிஞ்சும் தன்மை போன்ற சிறப்புத் தன்மைகள் இருப்பதால், இன்றைய இளைய தலைமுறையினர், இந்த துணியினால் செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளை, விரும்பி அணிகிறார்கள், இதற்கு சிறந்த வரவேற்பு உள்ளது. எனவே, பின்னலாடை உற்பத்தியாளர்கள் இதனை அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த உற்பத்திக்குத் தேவையான பயோவாஷ் துணிகளை அதிக அளவில் நாங்கள் வர்த்தகம் செய்து வருகிறோம்.
கேள்வி: உங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் துணி ரகங்கள் மற்றும் GSM அளவுகள் மற்றும் தரம்
குறித்த தகவல்களை கூறுங்கள்?
பயோவாஷ் துணிகளில், 10-12 வகைகள் தயாரிக்கிறோம். 160 GSM, 200 GSM, 240 GSM (ஜெர்சி), 300 GSM (புதிய அறிமுகம்) மேலும், லூப் நெட் 240 GSM 100 கலர்கள், போலோ டி-ஷர்ட் ஃபேப்ரிக் 50 கலர்கள்
என்று விரிவான கலர் ரேஞ்ச் வைத்துள்ளோம். நாங்கள், இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர டையிங் மெஷின்களிலும், இறக்குமதி செய்யப்பட்ட டைஸ்களையும் பயன்படுத்துகிறோம். தரத்தில் எவ்வித சமரசமும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பும் தரத்தை வழங்கி அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதே எங்களது நோக்கம்.
கேள்வி: பாலியஸ்டர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட துணி வர்த்தகத்திலும் உங்களது நிறுவனம் எந்த அளவில் சேவை வழங்குகிறது?
கடந்த, சில ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஃபேன்சி ரக துணிகளை, கேட்டு வருகிறனர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு ஆயத்த பின்னலாடை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான துணிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். மார்க்கெட்டில் புதியதாக அறிமுகம் செய்யப்படும் புதிய துணி வகைகளை உடனுக்குடன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் முக்கிய இலக்கு. புதிய டிசைன், புதிய ரேஞ்ச், புதிய ட்ரெண்ட் அனைத்தையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த விரும்புகிறோம். வாடிக்கையாளர்கள் வளர்ந்தால்தான், நாமும் வளர முடியும். தரமான பொருள், சரியான டெலிவரி, முழு வாடிக்கையாளர் திருப்தி, இதுவே எங்களின் வாடிக்கையாளர் பாலிசி.
கேள்வி: இளம் தொழில்முனைவோராக இன்றையை இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
எந்த தொழிலாக இருந்தாலும், முதலில் அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். சில ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து அனுபவம் பெற்று, சிறிய அளவில் தொழில் தொடங்கி, பொறுமையாக வளர வேண்டும். அவசரப்படக்கூடாது, கற்றுக்கொண்ட தொழிலை நிதானமாக செய்தால், வெற்றி நிச்சயம்.
கேள்வி: இந்த பேட்டியின் வாயிலாக, பின்னலாடைத் தொழில்துறையினருக்கு, உங்கள் நிறுவனத்தைப் பற்றி சொல்ல விரும்பும் தகவல் என்ன?
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான, அனைத்து துணி ரகங்களையும், நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். தொழில் துறையினருக்கு என்ன தேவையோ, அத்தனை துணி ரகங்களும் எங்களிடம் உள்ளது. எங்களிடம், Ready to Cut Fabric அனைத்து கலர்களிலும் உள்ளது. சாம்பிள் கொண்டு வந்தாலும், மிகக் குறைந்த காலத்தில் தயாரித்து தரும் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. எங்களது, தொழிலகம் மற்றும் ஷோரூம் லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி அருகே அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்புக்கு : BELUI FABRICS, D.No. 43, 43/1, Ground Floor, Bridgeway Colony, Tirupur - 641 607. Cell : 96778 / 86044 / 88389 84600Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

