:
Breaking News

பின்னலாடை துணி உற்பத்தி வர்த்தகத்தில் தரம், நம்பிக்கை, வாடிக்கையாளர்களின் வளர்ச்சி இவை தான் எங்கள் குறிக்கோள்.(V.B.R.CLOTHING நிர்வாக இயக்குனர்கள் திரு.V.B.ரவி, திரு.R.கார்த்திகேயன் பேட்டி)

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

பின்னலாடை துணி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் நிறுவனம் தான், VBR கிளாத்திங் நிறுவனம். இந் நிறுவனத்தின் பின்னலாடைத் தொழில்துறைச் சேவைகளை அறிய, இதன் நிர்வாக இயக்குனர்கள் திரு.V.B.ரவி மற்றும் அவரது புதல்வர் திரு.கார்த்திகேயன் ஆகியோர்களை சந்தித்து பேசினோம். அவர்கள்  நம்மிடம் தெரிவித்ததாவது,

எங்களது, VBR கிளாத்தின் கம்பெனி, கடந்த 1990 ஆம் ஆண்டு, திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் சர்ப்லஸ் என்று சொல்லக்கூடிய, ஏற்றுமதி ஆயத்த ஆடை தயாரிப்புக்கு பிறகு கூடுதலாக இருக்கும் துணிகளை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து சேகரித்து வர்த்தகம்  செய்து வந்தோம். தொழில் துறையினரின், அதிகமான பின்னலாடைத் துணி தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நாங்களே சொந்தமாக துணிகளை தயாரிக்க தொடங்கினோம். கடந்த, 2010 ஆம் ஆண்டு முதல் தரமான நூல்களை தயாரிக்கும், முன்னணி நூற்பாலைகளின் நூல்களை கொள்முதல் செய்து, எங்களது சொந்த நிறுவனத்தில் பின்னலாடை துணிகளை தயாரித்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் டையிங் செய்து, வர்த்தகம் செய்து வருகிறோம். தற்போது, நாங்கள் 100க்கும் மேற்பட்ட கலர்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப துணி ரகங்களை தயாரித்து வழங்குகிறோம். பின்னலாடை துணி உற்பத்தித் துறையில், எங்களது 35 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு, எங்களது நேரடி பார்வையில் இறக்குமதி எந்திரங்களைக் கொண்டு பின்னலாடைத் துணிகளை நாங்களே உற்பத்தி செய்து, டையிங் செய்து தொழில் துறையினருக்கு வழங்கி வருவதால், தரம் பாதுகாக்கப் படுகிறது. நாங்கள் விற்பனை செய்யும் பின்னலாடை துணிகளை தொழில்துறையினர் விரும்பி வாங்குகின்றனர். எங்களது, பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் MAYER & CIE இறக்குமதி நிட்டிங் எந்திரங்களும், சொந்த டையிங் நிறுவனத்தில், இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன டையிங் எந்திரங்களும், நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், 20s RL, 25s RL, 30s RL COMBED SINGLE JERSEY, 40s RL LYCRA JERSEY, 25s RL LOOP UNIT, BIOWASH. 30s COMBED NON BIO, 30s SEMI COMBED என, அனைத்து வகையான துணிகளையும் தரமுடன் தயாரித்து, எங்களது நிறுவனத்தின் மூலம் வர்த்தகம் செய்து வருகிறோம். தரமான பின்னலாடை துணிகளை உற்பத்தி செய்து முழு திருப்தியோடு தொழில் துறையினருக்கு வர்த்தகம் செய்து வருகிறோம். எங்களது, VBR கிளாத்திங் நிறுவனத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கிலோ அளவில் துணிகள் இருப்பு வைக்கப்பட்டு நாங்கள் வர்த்தகம் செய்கிறோம், ஏற்றுமதியாளர்களுக்கான ஆர்டர்களையும் செய்து தருகிறோம். எனவே, தொழில் துறையினர் நேரடியாக, எங்களது நிறுவனத்திற்கே வந்து துணிகளை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான துணிகளை, கொள்முதல் செய்து கொள்ளலாம். எங்களது, வாடிக்கையாளர்களின் திருப்த்தியே எங்களது தொழில் வளர்ச்சி என்ற நோக்கத்தோடு, துணித் தேவைகளுக்காக எங்களை தொடர்பு கொள்ளும் தொழில் துறையினரிடம், அவர்களின் தேவையை கேட்டறிந்து, இன்முகத்தோடு நாங்கள் சேவை செய்வதாலும், அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல நினைத்து அவர்களது வளர்ச்சிக்கு நாங்கள் உதவுவதன் மூலம், இந்த வளர்ச்சியை எட்டி உள்ளோம். உள்நாட்டுப் பின்னலாடை உற்பத்தியாளர்களும், ஏற்றுமதி பின்னலாடை  உற்பத்தியாளர்களும் தங்களுக்குத் தேவையான பின்னலாடை துணிகளை, தேர்வு செய்ய எங்களது நிறுவனத்திற்கு வரும்போது சாம்பில்கள் கொண்டு வந்தால், அவற்றை எங்களது அனுபவமும், திறமையும் கொண்ட தொழிலாளர்களைக் கொண்டு அதிநவீன எந்திரங்கள் மூலம் 7 நாட்களில் தரமுடன் தயாரித்து அவர்களுக்கு விரைவான டெலிவரி செய்து விடுகிறோம். இவ்வாறு அவர் தனது  பேட்டியில்  குறிப்பிட்டார்.  

V.B.R CLOTHING, 

H.O.: Thiruneelakandapuram, North 3rd Street, Jayalakshmi Bakery Opp., P.N.Road., Tirupur - 641 602.


Branch Office : 33(1), 23(1), Elango Nagar, 

3rd Cross Street, P.N.Road, Tirupur - 641 602. 

Cell : 98430 5418,  98432 54181.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media