திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்குக் குவியும் கௌரவம்!
- Repoter 11
- 20 Dec, 2025
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்,
(AEPC) சார்பில் 2023-24 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளுக்கான, சிறந்த டெக்ஸ்டைல் பின்னலாடைத் தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களைக் கௌரவிக்கும் சிறப்பு விருது வழங்கும் விழா, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாபெரும் விழாவில், இந்திய அளவில் பின்னலாடை உற்பத்தியின் தலைநகராக விளங்கும், திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிர்வாகிகள் ஏராளமான விருதுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். இவ்விழாவில், இந்தியாவின் மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள், முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் உரையாற்றிய அவர், மாண்புமிகு
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, ஜவுளித் துறைக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான ஆதரவை வழங்கி வருகிறது. "விக்ஷித் பாரத்" (வளர்ச்சியடைந்த இந்தியா) மற்றும் ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) ஆகிய இலக்குகளை எட்டுவதில் ஆடை ஏற்றுமதித்துறை மிக முக்கியப் பங்காற்றும்,' எனத் தெரிவித்தார். மேலும், இந்திய ஜவுளித்துறையின் பெருமையை விளக்கும் THREADS OF TIME: STORY OF INDIAN TEXTILES” என்ற புத்தகத்தையும் துணை ஜனாதிபதி இவ்விழாவில் வெளியிட்டார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பல்வேறு பிரிவுகளில் உயரிய விருதுகளைப் பெற்றனர். அதிக ஏற்றுமதி (தங்கப்பதக்கம்):
SCM GARMENTS PVT LTD நிறுவனம் முதலிடம் பிடித்தது. இவ்விருதை, நிர்வாக இயக்குனர் திரு.பி.பி.கே.பரமசிவம் பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் இடம்: BEST CORPORATION PVT LTD நிறுவனத்திற்காக, அதன் நிர்வாக இயக்குனர்
திரு. ராஜ்குமார் ராமசாமி விருதைப் பெற்றார்.
மூன்றாம் இடம்: POPPYS KNITWEAR PVT LTD நிறுவனத்திற்காக ஏ.இ.பி.சி., துணைத் தலைவர் பத்மஸ்ரீ.டாக்டர்.ஏ.சக்திவேல் மற்றும் திருமதி.செல்வீஸ்வரி சக்திவேல் ஆகியோர் விருதைப் பெற்றனர்.
புதிய தொழில்முனைவோர் பிரிவு: ESSTEE EXPORTS
INDIA PVT LTD நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதனை அந் நிறுவனத் தலைவர் திரு.எம்.திருக்குமரன் பெற்றுக் கொண்டார்.
ESG விருது: சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்கான பிரிவில் JAY VISHNU CLOTHING PVT LTD 2ம் இடம் பெற்றது. இவ்விருதை திரு.கே.எம்.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். மேலும், திருப்பூரைச் சேர்ந்த CLASSIC COTTONZ, BEST TECH CLOTHING, JAYASHIMA ENTERPRISES, SRIE FLORA GARMENTS, S.S.G.APPARELS, SAGS APPARELS உள்ளிட்ட நிறுவனங்களும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. டெல்லி மாநில அரசின் தொழில்துறை அமைச்சர் திரு.மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஏ.இ.பி.சி தலைவர் திரு.சுதிர் சேக்ரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருவாரியான விருதுகளைப் பெற்றது ஒட்டுமொத்தப் பின்னலாடைத் தொழில்துறையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

