:
Breaking News

ஆயத்த பின்னலாடை உற்பத்தியில் PAD PRINTER மூலம் லட்சக்கணக்கில் பணத்தை மிச்சம் செய்யலாம்.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

ஆயத்தப் பின்னலாடை உற்பத்தித் 

 துறையில், பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் தொடரும் நடைமுறை என்றால், அது ஆடைகளில் தையல் 

எந்திரங்கள் மூலம், லேபிள் பொருத்தும் முறைதான். ஆயத்த ஆடைகளை  அடையாளப்படுத்தவும், உற்பத்தியாளர்களின் பெயர், அளவு, பராமரிப்பு விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் லேபிள்களை பயன்படுத்தப்படுகின்றன. பின்னலாடை உற்பத்தித் தொழில்துறையில் லேபிள்கள் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே திகழ்ந்து வந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து, லேபிளுக்கு மாற்றாக நேரடியாக துணியிலேயே அச்சிடும் பேட் பிரிண்டிங் (Pad Printing) என்ற நவீன தீர்வு இன்று ஆயத்தப் பின்னலாடைத் துறையில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த எந்திரத்தை தயாரித்து வழங்கும் நிறுவனம்தான், ஜெயவேதிக் இன்கார்ப் நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனர், திரு.பார்த்திபன் ராஜா அவர்கள் தயாரித்து வழங்குகிற இந்த எந்திரத்தை, இந்தியா முழுவதும் ஆயத்த ஆடை உற்பத்தித் தொழில்துறையினர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எந்திரத்தின், இந்திய விநியோகஸ்தராக ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இந்த தொழில்நுட்பத்தை, இந்திய அளவில் தொழில்துறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும், ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரஞ்சித் அவர்கள், 

இந்த மாற்றத்தின் பின்னணி, தொழில்நுட்ப அம்சங்கள், உற்பத்தி செலவுக் குறைவு, உற்பத்தித் திறன் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்  குறித்தும் நமது  இதழுக்கு  பேட்டி அளித்தார். இனி அவரது பேட்டி.


கேள்வி: ஆயத்த ஆடை பின்னலாடைத் துறையில், 

பேட் பிரிண்டிங் தொழில்நுட்பம் தற்போது அதிக கவனம்  பெறுவதற்கான  காரணம்  என்ன?

பதில்: பேட் பிரிண்டிங் என்பது, புதிதான தொழில்நுட்பம் அல்ல. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, இது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், டெக்ஸ்டைல் துறைக்கு, குறிப்பாக பின்னலாடை உற்பத்திக்கு ஏற்ற வகையில், இதை மாற்றியமைத்ததே சமீபத்திய முன்னேற்றம். திருப்பூரை, தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஜெயவேதிக் இன்கார்ப் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை ஆயத்த பின்னலாடைத்துறைக்கு பொருத்தமாக மேம்படுத்தி, இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது. இதன் நிறுவனர் திரு.பார்த்திபன் ராஜா அவர்கள், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், இந்த மெஷின்களை வடிவமைத்துள்ளார். 

அவருக்கு உறுதுணையாக, நாங்கள் எங்களது நிறுவனத்தின் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களை அளித்து அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ஜெயவேதிக் இன்கார்ப் நிறுவனம் தயாரிக்கும் இந்த பேட் பிரிண்டிங் எந்திரம் மேம்பட்ட புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும்.


கேள்வி : பல ஆண்டுகளாக, லேபிலையே 

பயன்படுத்தி வந்த தொழில்துறையினர், பேட் பிரிண்டிங்கை எளிதில்  ஏற்றுக்  கொண்டார்களா?

பதில்: ஆயத்த ஆடைகளை அடையாளப் படுத்த, லேபிள்களை பயன்படுத்தும் நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பின்பு, பியூசிங் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டது. லேபிள்களை பயன்படுத்தும் போது, பின்னால் கழுத்து பகுதியில் உறுத்தலாக இருக்கும். உள்ளாடைகளிலும், லேபிள்கள் உறுத்தலாக இருக்கும். இந்த பேட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் லேபிள்களால், உறுத்தல் இருக்காது தோலிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி செய்யப்பட்ட மைகளே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாங்கள் விளம்பரத்தைவிட அனுபவத்தை முன்னிறுத்தினோம். தொழில்துறையினரின் துணியில், அவர்களது பிராண்ட் பெயரிலேயே பேட் பிரிண்டிங் செய்து இலவச சாம்பிள்களை வழங்கினோம். அதை அவர்கள் பயன்படுத்திப் பார்த்தபோது இந்த தொழில்நுட்பத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை  உருவானது.


கேள்வி: லேபிள் மற்றும் பேட் பிரிண்டிங் இந்த இரண்டுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் என்ன?

பதில்: லேபிள் தைப்பது என்பது, கூடுதல் துணி, கூடுதல் வேலை, கூடுதல் செலவு. குறிப்பாக குழந்தைகள் ஆடைகள், இன்னர் வேர், ஸ்போர்ட்ஸ் வேர் போன்றவற்றில், லேபில் தோலுக்கு உறுத்தலாக இருக்கும் பேட் பிரிண்டிங்கில், அச்சுத் துணியோடு ஒன்றிணைந்து விடும். இதனால், "றீளஉலிஐd றீவஷ்ஐ" போன்ற உணர்வு, அரிப்பு அல்லது எரிச்சல் இல்லை. குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆடைகளுக்கு மிகச் சிறந்த தீர்வு, இது பயனாளர்களின் வசதியையும், பிராண்டின் மதிப்பையும் ஒரே நேரத்தில் உயர்த்துகிறது. லேபிள் தைப்பதில் ஒரு நபர் நாள் முழுவதும் வேலை செய்தால் அதிகபட்சம் 2000–3000 பீஸ்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், 

பேட் பிரிண்டிங் மெஷினில் ஒரு மணி நேரத்திற்கு 800–1000 பீஸ்கள் பிரிண்ட் செய்ய இயலும் நாள் முழுவதும் 8000–10000 பீஸ்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும், லேபிள் வாங்கும் செலவு இல்லை, தைப்பதற்கான கூலி இல்லை, ஒரே நபர் அதிக உற்பத்தி. இதனால், உற்பத்தி செலவு குறைவு. பெரிய அளவிலான உற்பத்தியில், இது லட்சக்கணக்கான ரூபாய் சேமிப்பாக  மாறுகிறது.


கேள்வி: லேபிள்களுக்கு மாற்றாக, பேட் பிரிண்டிங் செய்யும்போது, வாஷ் செய்தால் அழிந்துவிடுமோ என்ற சந்தேகம் உள்ளது. இதன் பிரிண்டிங் தரம் குறித்து  உங்கள்  உத்திரவாதரம்  என்ன?

பதில் : இந்த மெஷினில், சாதாரண இங்க் பயன்படுத்தப்படுவதில்லை. பேட் பிரிண்டிங்கிற்கே உரிய, இத்தாலிய “Sericom” பிராண்ட் இங்க் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவன சிறப்பம்சங்கள் என்று பார்க்கும்போது OEKOTEX, ZDHC Level-3 சான்றிதழ் பெற்ற 

ஒரே நிறுவனம். 100 வாஷ்கள் வரை கேரண்டி. தோலுக்கு பாதுகாப்பான கெமிக்கல் கலவை. நாளடைவில் லேசான மாற்றம் ஏற்படலாம். ஆனால்,  அச்சு  முற்றிலும்  அழியாது.


கேள்வி: மெஷினின் உதிரிப்பாகங்கள், உத்திரவாதம் மற்றும் சர்வீஸ் சேவை வசதிகள் குறித்து விளக்கிக் கூறுங்கள்?

பதில்: இந்த மெஷினில் ஜப்பான் SMC, தைவான் AIRTAC போன்ற உலகத் தரமான ஆட்டோமேஷன் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எங்களிடம் இந்த பேட் பிரிண்டிங் எந்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஆண்டிற்கு  இலவச உதிரி பாகங்கள், ரீப்ளேஸ்மென்ட், திருப்பூரில் 1 ஆண்டு இலவச சர்வீஸ், மெஷின் OUTER BODIES, LIFETIME WARRANTY. நாங்கள் இந்த எந்திரத்தில் குறிப்பாக எங்களது ஓன் போர்டு செட்டார் சாஃப்ட்வேர் ஒன்றை பொருத்தியுள்ளோம். மேலும், சிறந்த டயக்னோஸ்டிக் சாப்ட்வேர் மூலம், தொலைதூரத்தில் இருந்தே மெஷின் பிரச்சினைகள் கண்டறிந்து சரி செய்யப்படுகின்றன. திருப்பூரில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் எளிதில் நேரில் சென்று சர்வீஸ் செய்து விடுகிறோம். தொலைதூரத்தில் இருந்து அதாவது, வட இந்தியா போன்ற மாநிலங்களில் இருந்து எங்களது எந்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இந்த சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேரின் மூலம் மிஷினில் எந்த பாகம் இயங்கவில்லை எந்த பாகங்களில் பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து கொள்ள இயலும். இந்த வகை தொழில் நுட்பங்கள் எதிர்கால வளர்ச்சி கருத்தில் கொண்டு இந்த எந்திரத்தில் தற்பொழுதே பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியாக இங்கிருந்து எந்த உதிரி பாகங்களில் பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த உதிரி பாகங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அனுப்பி விட முடியும் அல்லது இங்கிருந்து அந்த உதிரி பாகங்களை எடுத்துக் கொண்டு நேரில் சென்று அவர்களுக்கு சர்வீஸ்  செய்து  கொடுப்பது  எளிது.


கேள்வி: ஜெயவேதிக் இன்கார்ப் நிறுவனமும்  உங்களது ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் நிறுவனமும் இணைந்து செய்துவரும் கூட்டுப் பணி வர்த்தகம் எவ்வாறு  உருவானது?

பதில் : திரு. பார்த்திபன் ராஜா அவர்கள் 

முதலில் எங்களிடம் உதிரி பாகங்கள் வாங்கிய வாடிக்கையாளராக அறிமுகமானார். அவரை உரிமையாக எனது சகோதரர் என்று தான் 

நான் அழைப்பேன். அனைவருக்கும் எனக்குமான கருத்து பரிமாற்றம் சிறப்பாக ஒத்துப்போனது. இதனால் தொழில்நுட்ப பரிமாற்றம், நம்பிக்கை, ஒரே பார்வை ஆகியவை உருவானது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களை வெற்றிகரமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தரமான மெஷினை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது. இந்திய எந்திரம் என்று சொல்லும்போது அதனை எளிதில் நாங்கள் விநியோகிக்க துவங்கவில்லை முழுமையாக அந்த தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அதனுடைய தரத்தையும் ஆராய்ந்து வாடிக்கையாளர்களுக்கு இது எவ்வகையான சேவைகளை வழங்கும் என்பதை முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்டே இந்த ஜெயவேதிக் இன்கார்ப் நிறுவனத்தின் பேட் பிரிண்டிங் எந்திரத்தை விற்பனை செய்ய தொடங்கினோம். 

இன்று நாங்கள் இணைந்து Authorized Distributor ஆக செயல்படுகிறோம். Customised எந்திரங்கள் முதற்கொண்டு நாங்கள் இப்பொழுது  செய்து கொண்டு இருக்கிறோம்.


கேள்வி: இந்த பேட்டியின் வாயிலாக, ஆயத்த பின்னலாடை தொழில்துறையினருக்கு உங்கள்  செய்தி  என்ன?

பதில் : இனி வரும் கால கட்டங்களில் ஆயத்த ஆடை இறக்குமதியாளர்கள் ஏற்றுமதியாளர்களிடம் ஒரு துணியை 

உற்பத்தி செய்யும் போது என்ன விதமான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் என்று தான் கேட்பார்கள். மேலும், உற்பத்தியில் செலவினங்களை மிச்சப்படுத்துவதில் பேட் பிரிண்டிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒரு பீஸிற்கு ஒரு ரூபாய் மிச்சப்படுத்துவது என்பது மிகப் பெரிய தொகையாக இருக்கும். இங்கேயே நாங்கள் இந்த எந்திர உற்பத்தியில் ஈடுபடுவதால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ்ட்டு எந்திரங்களையும் நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம். 

யாரும் இதை நேரில் பார்த்து முயற்சி செய்ய விரும்பினால், நாங்கள் இலவச சாம்பிள்கள் செய்து வழங்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் சிறந்த தொழில்நுட்ப அப்டேட், செலவுக் குறைப்பு, பயனர் வசதி இந்த மூன்றும் எந்த தயாரிப்புக்கும் அடிப்படையாக இருக்கும். அந்த வகையில் பேட் பிரிண்டிங் தொழில்நுட்பம் 

ஆயத்த பின்னலாடைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். லேபிள் தைக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து, நவீன பேட் பிரிண்டிங் தொழில்நுட்பம் நோக்கி நகரும் இந்த மாற்றம், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் லாபம் 

அளிக்கும் தொழில்நுட்பப் புரட்சியாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Contact :  STARK ENTERPRISES

Regd Office: #Ragavi Complex, Opp.Tamilnadu Theatre, Palladam Road, Tiruppur - 641 605. Cell : 75400  08777.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media