:
Breaking News

நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில் GJV REALTORS நிறுவனத்திற்கு சிறந்த தொழில்துறை சேவைக்கான டாக்டர். அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுமனை விற்பனைத் துறையில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக தனிச்சிறப்போடு திகழ்ந்து வரும் நிறுவனம் தான் GJV REALTORS நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனர் திரு.ஜெகநாதன் அவர்கள். தமிழ்நாட்டின், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக, தனது நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2012 முதல் மக்களுக்கு மிகச்சிறந்த மனை, குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளை குறைந்த விலையில், உயர்ந்த தரத்தில் வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 150 வீடுகள் மற்றும் 2000 வீட்டு மனைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். தற்போது கோவை, காளப்பட்டியில் பிரம்மாண்டத்தின் உச்சமாய், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் நமது Cubism Architech திரு.பிரசன்னா அவர்களின், பிரம்மாண்ட வடிவமைப்பில் அமைந்துள்ள GJV TRANQUIL பிரீமியமான Full Gated Community Villas Project 25 சென்ட் முதல் 50 சென்ட் வரையில், 22 தனித்தனி வில்லாக்கள், 50 சென்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய Club House 10 Minutes Access To Airport, Kmch, Royal Care Hospital, International Schools அருகில் அமைந்துள்ளது இந்த GJV REALTORS நிறுவன வில்லாக்கள். இதில் 12 வில்லாக்களை, திருப்பூரில் மண்ணின் மைந்தர்கள் வாங்கி உள்ளனர். அது மட்டுமல்லாது சிறந்த முதலீட்டுக்கென்றே இடிகரையில் 25 ஏக்கர் பரப்பளவில் DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற 500க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களும் உள்ளன.  பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா வித்யாலயம் கல்லூரி எதிரில் 12 தள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கார்ப்பரேட் கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் அமைய உள்ளது. கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை குறைந்த விலையில் ஏற்பாடு செய்து  வழங்குகின்றனர். இவர்களின் இந்த சிறப்பான சேவையை பாராட்டி நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளிவிழாவில் டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பத்ம ஸ்ரீ.டாக்டர்.சக்திவேல், சேவைச் செம்மல் டாக்டர்.திரு.முருகநாதன்,  
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன், நிட்மா தலைவர். அகில் ரத்தினசாமி, துணை மேயர் திரு.எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் டையர்ஸ் அசோஷியேசன் தலைவர் திரு.காந்திராஜன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media