சிறுநீரக பாதிப்புக்கு தீர்வாக அதிநவீன டயாலிசிஸ் சிகிச்சை முறைகள் ஏராளம் உள்ளன
- Repoter 11
- 08 Oct, 2025
மனித உடலின் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம் ஆகும். சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்புகளை, இன்றைய அதிநவீன டயாலிசிஸ் சிகிச்சை முறைகள் மூலம் சரியான முறையில் தீர்வு அளிக்க முடியும் எனக் கூறுகிறார், திருப்பூர் ஏ.எம்.சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவ நிபுணர் திரு.பூபாலன் அவரை நமது இதழுக்காகவும் YOUTUBE சேனலுக்காகவும் சந்தித்து பேட்டி கண்டோம். இனி அவரது பேட்டி,
கேள்வி : பொதுவாக, சிறுநீரக பாதிப்பு என்பது
எந்த வயதில் ஏற்படுகிறது. இதற்கென்று வயது வரம்பு ஏதேனும் உள்ளதா டாக்டர்?
சிறுநீரக பாதிப்பு என்பது, எந்த வயதில் வேண்டுமானாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தையிலிருந்து, 60 வயது வரைக்கும், அதற்கு மேலும் உள்ள மனிதர்களுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாகவும் சிறுநீரக பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது .
40 வயதுக்கு மேற்பட்டவர்கள், அடிக்கடி சிறுநீரக இயக்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் வெளியேறுவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி, சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து கவனித்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, உருவாகும் அறிகுறிகள் என்ன? கிரியேட்டின்
அளவு எந்த அளவு இருக்க வேண்டும்?
சிறுநீரகங்கள், நமது உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடல் சீராக இயங்குவதற்கு உதவுகின்றன. சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம், உயர் ரத்த அழுத்தம் காரணமாக கழிவுகளை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் மிகக் குறைவான அளவிலேயே வெளியேறுதல் முகம், கை, கால்களில் வீக்கம் ஏற்படுதல் இவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனைகளை மேற்கொண்டு சிறுநீரக இயக்கங்களை கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான ஒரு மனிதரின் கிரியேட்டின் அளவு, 1 என்ற அளவில் தான் இருக்க வேண்டும். அதற்கு மேலாக அதிகரிக்கும் பொழுது, சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து, அதற்கான சிகிச்சை முறைகளை தொடங்க வேண்டும். இவைதான் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இதை சரியாக கவனிக்கவில்லை என்றால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறாத காரணத்தினால் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாகி, உடல்நிலை மேலும், பலவீன நிலையை அடைந்து நடக்க இயலாமல், நோயாளி மிகவும் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். எனவே, ஆரம்ப நிலையிலே சிறுநீரக பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி : AMC மருத்துவமனையில், சிறுநீரக பாதிப்பு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்களுக்கு, சிகிச்சை அளிக்க
இம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி கூறுங்கள்? சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கிரியேட்டின் அளவு சற்று அதிகமாக அதாவது 2, 2.50 என்ற அளவில் இருக்குமானால் அவர்கள் உடனடியாக டயாலிசிஸ் என்ற நிலைக்குச் செல்லாமல் அவர்கள் உடல்நிலை பாதிப்பு அளவுகளை ஆய்வு செய்து மருந்து மாத்திரைகள் மூலமாக சில ஆண்டுகள் சிறுநீரகங்களை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு சிகிச்சை முறைகள் உள்ளன. வயது முதிர்வின் காரணமாக சிறுநீரக பாதிப்புக்கள் மேலும் அதிகமாகாமல் சில ஆண்டுகள் மருந்து, மாத்திரைகள் மூலமாகவே ஓரளவு குறைவான கிரியேட்டின் அளவுள்ள நோயாளர்களை பாதிப்பு அதிகமாகாமல் பாதுகாக்க முடியும். டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்து சில ஆண்டுகள் அவர்கள் உடல்நலத்தை மருந்து, மாத்திரைகள் மூலமாகவே பராமரிக்கவும் முடியும். ஏ.எம்.சி மருத்துவமனை மூலமாக சிறுநீரக பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த அதிநவீன டயாலிசிஸ் எந்திரங்கள் மூலமாக நோயாளர்களின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு, எனது நேரடி மருத்துவ கண்காணிப்பின் மூலமாக ஏராளமான நோயாளர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களது உடல் நலத்தை பாதுகாக்கிறோம். இங்கு சிறுநீரக பாதிப்பு நோயாளர்களுக்கு தேவையான அனைத்து அதிநவீன டயாலிசிஸ் எந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன. பொதுவாக டயாலிசிஸ் செய்யும் நிலையில் உள்ள நோயாளர்கள் கோவை போன்ற நகரங்களுக்கு நீண்ட நேரம் பயணம் செய்து டயாலிசிஸ் சிகிச்சைக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம், எனது சொந்த ஊரே திருப்பூர் தான். இதற்காகவே நான் சிறுநீரகம் சார்ந்த மருத்துவ படிப்புகளை கற்றுத் தேர்வு நெப்ராலஜிஸ்ட் மருத்துவர் என்ற நிலையை அடைந்துள்ளேன். எனவே, திருப்பூரில் ஏ.எம்.சி மருத்துவமனையிலேயே டயாலிசிஸ் சிகிச்சைகளை மேற்கொண்டு உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளலாம். டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இன்றி டயாலிசிஸ் செய்வதை நிறுத்தவே கூடாது. டயாலிசிஸ் செய்வதை நிறுத்துவதோ, கால தாமதப்படுத்துவதோ உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்பு பிரச்சனைகளுக்கு எங்களது ஏ.எம்.சி சிறப்பு மருத்துவமனையில் மிகச் சிறப்பான கண்காணிப்பு மற்றும் அதி நவீன டயாலிசிஸ் எந்திரங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி நீண்ட காலம் வாழலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

