ஜாதி, மதம், இனம், அரசியல் பாகுபாடற்ற தமிழர் வணிக மேம்பாட்டு மாநாடு (RISE-சங்கம் - 5) 2026 ஜனவரி 8 - 11, 4 நாட்கள் நடக்கிறது.
- Reporter 12
- 02 Dec, 2025
ஒருங்கிணைக்க வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கோடு, அருட்தந்தை திரு.ஜெகத்கஸ்பர் அவர்களால் தொடங்கப்பட்டது தான், ரைஸ் என்ற பன்னாட்டு தமிழர்கள் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு.
இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் தொழிலிலும், வர்த்தகத்திலும் வளர தொடர்ந்து பல்வேறு மாநாடுகள் மற்றும் வர்த்தக கூட்டங்களை நடத்தி, தமிழர்கள் வாழ்வில், தொழிலில்
புதிய வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
ரைஸ் அமைப்பு. இந்த அமைப்பு
சார்பாக, வருகிற ஜனவரி 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில், மதுரையில் நடத்தப்பட
இருக்கும் தொழில் மாநாட்டின் ஆலோசனை கூட்டத்திற்காக, ரைஸ் அமைப்பின்
நிறுவனர் திரு.ஜெகத் கஸ்பர் அவர்கள் திருப்பூர் வந்திருந்தார். அவரை, நமது இதழின்
ஆசிரியர் சந்தித்து இந்த அமைப்பு குறித்தும், இந்த அமைப்பின் சேவைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்தும் பேட்டி கண்டார்.
இனி அவரது பேட்டியைக் காணலாம்.
கேள்வி: ரைஸ் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு செய்து வரும் சேவைகள் குறித்தும் அதன் நோக்கம் செயல் திட்டங்கள் குறித்தும் கூறுங்கள்?
ரைஸ் என்ற பெயரின் தமிழாக்கம், எழுமின் என்பது ஆகும். உலக அளவில் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், திறனாளர்கள் இடையே ஒரு உறவு பாலத்தை ஏற்படுத்தி அவர்கள் மேலும், வளர்ச்சி அடைய உதவுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். ஒப்பிடுகையில் தமிழர்களை நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், இணைக்கும் மிகச்சிறந்த அமைப்புக்கள் இருந்தாலும், உலக அளவில் உள்ள தமிழர்களை இணைக்கும் ஒரே அமைப்பு, நமது ரைஸ் அமைப்பாகும். இதுவே, எங்களது
அமைப்பின் தனித்துவமாகும். 40க்கும் மேற்பட்ட நாடுகளில், எங்களது அமைப்பிற்கு கிளை அலுவலகங்களும், தனி அலுவலகம் இயங்கி வருகின்றன. 7 ஆண்டுகளில்,
15 உலக மாநாடுகளை நடத்தி, தமிழ்
தொழில் முனைவோர்களின் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வருகிறது, எங்களது ரைஸ்
அமைப்பு. எங்களது, மாநாடுகள் எல்லாம்
5 நட்சத்திரம் அல்லது
7 நட்சத்திர ஹோட்டல் அரங்கங்களில், மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. எங்களது, அடுத்த தமிழர் தொழில் வணிக மாநாடு, மதுரையில் வருகிற ஜனவரி 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி, ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த விழா, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வர்த்தக சந்திப்புக் கூட்டமாக நடத்தப்பட்டு,
11ம் தேதி கீழடியில் பொங்கல் வைத்து, நிறைவு செய்யப்படுகிறது. இந்த மாநாட்டின் தனித்துவம் என்னவென்றால், அமெரிக்க வரி விதிப்பினால் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அந்தத் துறைகளில் உள்ள பையர்களோடு தொடர்புகளை உருவாக்கி, முடிந்தவரை இந்த பாதிப்புகளை குறைப்பதற்கு எப்படி வணிக துறையிலே முயற்சி எடுக்க வேண்டுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த மாநாட்டில் முதலாவதாக டெக்ஸ்டைல் தொழில்துறை, புட் வேர் மற்றும் லெதர் தொழில்துறையினர், விவசாயம் மற்றும் உணவுத்துறை, இன்ஜினியரிங் துறை, சாப்ட்வேர் உற்பத்தி தொழில்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை என பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா, அபிதாபி, துபாய், மஸ்கட், சுவிட்சர்லாந்து, யுகே, ஜெர்மன், கனடா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் தொழில்முனைவோர்களை நேரடியாக சந்தித்து, தொழில்துறையின் வர்த்தக வாய்ப்புகளை பெற்று வளர முடியும்.
இந்த நாடுகளுக்கெல்லாம் நேரடியாக பயணித்து, தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பதற்கு, ஒவ்வொருவரும் கோடிகளில் செலவழிக்க வேண்டி வரும். ஆனால், மதுரையில் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான ஒரு பெரிய அரங்கத்தில், இந்த மாநாடு மேலே மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெற இருக்கிறது. இதற்கு
பதிவு கட்டணமாக, மிகக் குறைந்த
செலவில் தமிழர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ரூபாய் 15 ஆயிரம்
என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பில், உலகின்
பல்வேறு நாடுகளில் உள்ள மிகப்பெரிய தொழில் மற்றும் வணிகத்துறையினர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த
மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களது நட்பையும், உறவையும், இணைப்பையும், தொழில் வாய்ப்புகளையும் பெற்று வளர முடியும். உலக பூச்சந்தையில்,
14 சதவீத பூக்களை உற்பத்தி செய்கிற தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.முகமது எஹியா, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின்,
ஏஐ தொழில்நுட்பத்துறையின் முக்கிய பொறுப்பு வகிப்பவர் ஒரு ஈரோட்டுத்
தமிழர் திரு.செசில் சுந்தர் ஆவார்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த
திரு.கணேஷ் ராதாகிருஷ்ணன் நாசாவில்
முக்கிய அதிகாரியாக பணியாற்றுகிறார்.
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் திரு.பாலாசுவாமிநாதன், ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். அத்துடன், தொழில் வணிகத் துறையில் முக்கிய ஆளுமைகளான சென்னை சில்க்ஸ் திரு.நந்தகோபால், ராமராஜ் காட்டன் நிறுவனர் திரு.நாகராஜன்
போன்ற ஆளுமைகளும் உலகளாவிய
தொழில் முனைவோர்களும் இந்த
மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
எனவே, எந்தவித ஜாதி, மத, இன,
அரசியல் பாகுபாடற்ற தமிழர்களின்
தொழில் வாழ்வாதார வளர்ச்சிக்காக,
மட்டுமே நடத்தப்படும் இந்த தொழில்
வணிக மாநாட்டை அனைத்து தமிழ்
மக்களும் தொழில்துறையினரும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

