மூளை நரம்பியல் பாதிப்பு பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண 24 மணி நேரமும் செயல்படும் CNS SUPERSPECIALITY மருத்துவமனை.
- Reporter 12
- 03 Apr, 2026
மருத்துவத்துறையில் மூளை, நரம்பியல் சிகிச்சை முறை மிகவும் நுட்பமான துறையாகும். பக்கவாதம், மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஆகிய நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காண மூளை நரம்பியல் மருத்துவ சிகிச்சை முறை கையாளப்படுகிறது. இந்தத் துறையில் மிகச் சிறப்பான சேவையாற்றி வரும், திருப்பூர் அவினாசி அருகே அமைந்துள்ள சி.என்.எஸ் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.ரமேஷ் அவர்களை சந்தித்து பேட்டி கண்டோம். இனி அவரது பேட்டி...
கேள்வி: இன்று, மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், குறிப்பாக, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு பாதிப்புகளுக்கு உள்ள சிகிச்சை முறைகள் பற்றி கூறுங்கள் ?
இன்று, மருத்துவத்துறையில் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. அவற்றின் மூலம், பல கடுமையான நோய்களிலிருந்து மனிதர்களை காப்பாற்ற முடிகிறது. குறிப்பாக, பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் சமீப காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவை எப்போது, யாருக்கு ஏற்படும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. இது ஒரு விபத்து போல எந்த நேரத்திலும் நிகழக்கூடியது. ஆனால், இதிலிருந்து நம்மால் எளிதாக மீள முடியும். அதற்கான சிகிச்சை நம்மைச் சுற்றியே இருக்கிறது, எங்களது சி.என்.எஸ். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை
இதற்காகவே உருவாக்கி, இரவு பகலாக சேவை செய்து வருகிறோம்.
கேள்வி: பக்கவாத பாதிப்புக்களுக்கு, நீங்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் பற்றி கூறுங்கள்?
ஒரு ஸ்ட்ரோக் நோயாளி மருத்துவமனைக்கு வந்தவுடன் உடனடியாக “STROKE PROTOCOL” செயல்படுத்தப்படும். 2 முதல் 3 நிமிடங்களுக்குள் ஸ்கேன் எடுக்கப்படும். நோயாளி “GOLDEN PERIOD” எனப்படும் 3 மணி நேரத்திற்குள் வந்தால், உடனடியாக ரத்தக் குழாய் அடைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி “THROMBOLYSIS” எனப்படும் சிகிச்சை அளிக்கப்படும். இந்த மருந்து ரத்தக் குழாயில் படிந்துள்ள கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை உடனடியாக சீராக்கும். அதன் மூலம் நோயாளி விரைவாக மீள்கிறார்கள். கை, கால் இயங்காமல் வந்தவர்கள் கூட சிகிச்சைக்கு பிறகு இயல்பாக இயக்கம் பெறுகின்றனர். இந்த சிகிச்சை முறையை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். எனவே பொதுமக்களுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், பக்கவாதம் ஏற்பட்ட உடன் உடனடியாக காலதாமதம் இன்றி எங்களது மருத்துவமனைக்கு வந்து விட்டால், உரிய சிகிச்சை அளித்து பக்கவாதத்தை முற்றிலும் குணமாக்கி விட முடியும்.
கேள்வி: மூளை நரம்பியல் துறையை, நீங்கள் தேர்வு செய்ததற்கான காரணம் மற்றும் உங்கள் கல்விப் பயணம் குறித்து விளக்க முடியுமா?
நான், MBBS படிப்பை, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் முடித்தேன். அதன் பிறகு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், பொது அறுவை சிகிச்சையில் மேற்படிப்பு முடித்தேன். பின்னர், அதே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், நரம்பியல் அறுவை சிகிச்சையில், மேற்படிப்பை முடித்தேன். அங்கு, 3 ஆண்டுகள் மிகவும் கடினமாக உழைத்தேன். ஏனென்றால், சென்னை மருத்துவக் கல்லூரியில், 50 முதுநிலை மாணவர்கள் பணியில் உள்ளார்கள் என்றால் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அந்த இடத்தில் ஒரே ஒரு மாணவராக நான் செயல்பட்டேன். ஒரே ஒரு மாணவராக இருந்ததால், பலருக்கான பணிகளை ஒருவராக செய்ததால், நிறைய அனுபவம் கிடைத்தது. அங்கு நான் பணிபுரிந்த போது சரியாக உறங்குவதற்கு கூட எனக்கு நேரம் கிடைத்ததில்லை. அந்த அனுபவமும், நம்பிக்கையும் தான்
இன்று இரவு பகலாக நோயாளிகளுக்கு சேவை செய்ய முடிகிறது.
கேள்வி: பக்கவாதம் மற்றும் மாரடைப்பு
ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
மிகவும் பொதுவான காரணம், மன அழுத்தம் தான். தொழில் மற்றும் குடும்ப பிரச்சனைகள் இதற்கு காரணமாக இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக, உணவுப் பழக்கவழக்கங்கள் குறிப்பாக, ஜங்க் புட் என்று அழைக்கப்படும் உணவுகள், அதிக கொழுப்பு உணவுகள், ஒழுங்கற்ற உணவு நேரம் ஆகியவை. மேலும், புகைப்பழக்கம், மதுபான பழக்கம் ஆகியவை மிக முக்கிய காரணிகள். சில நேரங்களில், பரம்பரை நோய் காரணிகளும் உள்ளன. ஆனால், நமது சூழலில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துவது மன அழுத்தமே. மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை முறைகளை வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவை இந்த பாதிப்புகளில் இருந்து விடுவிக்க உதவும். மன அழுத்தத்தை குறைக்க. யோகா, தியானம் போன்றவை உதவும். உடல் பரிசோதனைகளை நாள் தோறும் செய்து, இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அளவுகளை சரியாக வைத்திருக்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், 90 சதவீதம் வரை இந்த நோய்களைத் தடுக்க முடியும்.
கேள்வி: சமீப நாட்களாக, வலிப்பு நோய் அதிகமாக காணப்படுகிறது. வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
வலிப்பு நோய் என்பது, மக்கள் நினைப்பது போல மிகவும் ஆபத்தான நோயல்ல. இது ஒரு சமூக அவமானமும் அல்ல. ஆனால், பலர் இதை மறைக்க முயற்சிக்கிறார்கள், அது தவறு. மூளையில், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் இது நிகழ்கிறது. சில சமயங்களில், சர்க்கரை அளவு குறைவு அல்லது உப்புச்சத்து குறைவு காரணமாகவும் ஏற்படலாம். பல நேரங்களில், காரணம் தெரியாமல் இருக்கும். நோயாளியை தரையில் படுக்க வைத்து, அவரை அமைதியாக விட வேண்டும். தண்ணீர் கொடுக்கக் கூடாது. வலுக்கட்டாயமாக பிடிக்கக்கூடாது. பொதுவாக 2 நிமிடங்களில் வலிப்பு தானாகவே குறைந்து விடும். அந்த நேரத்தில் நோயாளி பாதுகாப்பாக
இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இதற்கு நிறைய சிகிச்சை முறைகள் இருக்கிறது. முறையான சிகிச்சை எடுத்து, மாத்திரைகளை நிறுத்தி விடாமல் கவனமாக எடுத்துக் கொண்டால் இந்த வலிப்பு நோய் பிரச்சினைகளிலிருந்து மீளலாம்.
கேள்வி: உங்கள் மருத்துவமனையின் முக்கிய
வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
எங்கள் மருத்துவமனையில், உயர்தர BIPLANE CATH LAB எங்களிடம் உள்ளது. இது மூளை மற்றும் இருதயத்திற்கான ஒரு கேத்லாப். இந்த அதிநவீன எந்திரம், திருப்பூரிலேயே எங்களிடம் தான் உள்ளது. 1.5 TESLA MRI, NEURO NAVIGATION இன்றைய எந்திரம் ரோபோடிக் வசதியுடன் மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் சிகிச்சைகள் மேற்கொள்ள இயலும் கருவி போன்ற வசதிகள் உள்ளன. இவை மிகவும் துல்லியமான சிகிச்சைகளை வழங்க உதவுகின்றன. NEURO MICROSCOPE என்ற இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, மூளையில் சிகிச்சை மேற்கொள்ளும் எந்திரமும் எங்களிடம் உள்ளது. மேலும், 24 மணி நேரமும் அவசர கால மருத்துவ வசதிகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அவசர நிலைகளில் உடனடி சிகிச்சை வழங்க முடிகிறது. இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
தொடர்புக்கு: CNS SUPER SPECIALITY HOSPITAL, 5/647, Palangarai Post, Anaipudur, Avinashi - 641654. Cell : 75300 55886
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

